சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேர போகும் நேஷனல் கர்ஷ் … அவரே வெளியிட்ட தகவல்

0
622

National crush pair up with the superstar : ராஷ்மிகா மந்தனா தற்போது நடித்து கொண்டிருக்கும் புதிய திரைப்படத்தை பற்றிய தகவல் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் பேசப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் 2016 ஆம் வருடம் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

National crush pair up with the superstar

இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்தார். அதன் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இப்போது வரை நீங்காத இடம் பிடித்துள்ளார்.

பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை ரஷ்மிகா தனது இயற்கை அழகால் எல்லோரையும் கவர்ந்து வருகிறார்.

அவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான ‘அனிமல்’ திரைப்படம் பல விமர்சனங்களை கண்டிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

அடுத்து அவரின் நடிப்பில் ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருவதை எல்லோரும் அறிந்ததே.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு இணையாக ராஷ்மிகா நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த தகவலை ராஷ்மிகாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here