இயக்குனர் H வினோத் பழனியில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற வெற்றி படங்களை இயக்கி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தவர் இயக்குனர் H வினோத். இவரது இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் H வினோத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜயை வைத்து “ஜனநாயகன்” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வருகின்ற ஜனவரி மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இப்படம் தொடர்பான அப்டேட்க்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இயக்குனர் வினோத் தனது நண்பரும் இயக்குனருமான ரா. சரவணனுடன் இணைந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here


