ஏன் திருமணம் ஆகல?; ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு; ஆறுதலடைந்த ரசிகர்கள்

0
143

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக தடம் பதித்தார் சிம்பு. இப்போது அவருக்கு 41 வயதாகிவிட்டது.அவர் தம்பி, தங்கைக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் வீட்டிற்கு மூத்த பிள்ளையான சிம்புவுக்கு மட்டும் கல்யாணம் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பது அவர் பெற்றோருக்கும், ரசிகர்களுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.சிம்புவின் காதல் குறித்து பல தகவல்கள் அந்தந்த சமயத்தில் பேசப்படும். இப்போது எந்த கிசு கிசு விலும் சிக்கி கொள்ளாமல் அமைதியாக இருந்து வருகிறார்.தற்போது ஆன்மீகத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இது குறித்து சிம்பு பேசியது இப்போது வைரலாகி வருகிறது. இந்த பொண்ணு தான் நமக்கு சரியான பொண்ணு, நாம கல்யாணம் செஞ்சிக்க போற பொண்ணு,நமக்கு தகுந்த பொண்ணு இதுதான் அப்படினு முடிவாகிடுச்சுன்னா அதுக்கு முன்னாடி 1,500 பொண்ணுங்க வந்தாலும் லவ் ஃபெயிலியர் தான்.

அந்த கரெக்டான பொண்ணை நாம் சந்திக்கும் வரைக்கும், அதாவது சோல்மேட் (ஆத்ம தோழன்) வரும் வரைக்கும் திருமணம் நடக்காது என்றார்.இதை பார்த்த 90 s கிட்ஸ் பலரும் சிம்பு சொன்னா சரியாதான் இருக்கும். நம்ம ஆள் வர்ற வரை காத்திருப்போம் என தமக்குள் பேசி வருகின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here