நடிகர் விஜயால், ரஜினிகாந்த்க்கு மறைமுகமாக விழுந்த பலத்த அடி  : மீண்டும் வருவாரா?

0
173

தி-கோட் படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சற்று சறுக்கலை சந்தித்ததுடன், விஜய் அவர்கள் தொடங்கிய கட்சி மூலம் மறைமுகமாக பலத்த அடியை சந்தித்துள்ளார். இதிலிருந்து அவர் மீண்டு வர முடியுமா? என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது ஆயிரத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் “தி கோட்”. நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.  இதில் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இருப்பினும் இப்படத்தில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் அவர்கள் தமிழ் சினிமாவில் இனி இல்லை, அதாவது டிரெண்ட்ங்கில் இல்லை என்பது போல சொல்லப்படுவதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 

அரசியல் பிரவேசம் :

மேலும், நான் அரசியலுக்கு அன்று வருவேன், இன்று வருவேன்; அப்போது வருவேன், இப்போது வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இதுவரை அரசியலுக்கு வரவில்லை. ஆனால் நடிகர் விஜய் அவர்கள் சொல்லாமலேயே அரசியலுக்குள் நுழைந்து தனிக்கட்சி ஆரம்பித்து, கட்சி கொடியையும் அறிமுகப்படுத்திவிட்டார். விரைவில் கட்சியின் மாநாட்டையும் நடத்த உள்ளார்.

கூலி, வேட்டையன்

நடிகர் ரஜினிகாந்த அவர்களுக்கு அடுத்ததாக “கூலி”, மற்றும் “வேட்டையன்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் பதிலடி கொடுப்பாரா நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் என்பதை நாம் பொருத்திருந்து பார்ப்போம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here