நடிகர் கமல் தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடியா? யாரும் நம்ப வேண்டாம்!..

0
109

நடிகர் கமல் அவர்களின் சினிமா தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு லைக்கா நிறுவனம் பெயரில் நடிகர்கள் தேவை என்ற விளம்பரம் மூலம் மோசடி நடைபெற்றது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமும் உரிய விளக்கமும் அளித்தது. இதேபோன்று நடிகர் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் பெயரில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் விக்ரம், விருமாண்டி, விஸ்வரூபம் விக்ரம்(2022) போன்ற படங்களை தயாரித்துள்ளார். பிற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் கமல்ஹாசன் அவர்கள் தயாரித்துள்ளார். நடிகர் சிலம்பரசன் அவர்களின் 48வது படம், நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிப்பில் அமரன் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில், “யாரேனும் பணம் மோசடியில் ஈடுபட்டாலும் நடிக்கிறதுக்கு வாய்ப்பு என்ற பெயரில் மோசடி ஈடுபட்டாலும் அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது சினிமாக்காக வாய்ப்பு தேடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here