இதே பழைய கதை தான் : வேட்டையன் பட டிரெய்லர் சோதப்பல்

0
143

“ஜெய் பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில், வேட்டையன் படத்தின் டிரெய்லர் யூடிப்பில் வெளியானது. பல் லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ள வேட்டையன் படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இருப்பினும் டிரெய்லர் காட்சிகளை பார்க்கும்போது கதைக்களம் புதிதாக இல்லை, பெரிசாக எதுவும் இல்லை. அதே பழைய கதை தான் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இருப்பினும் படம் வெளியாகட்டும் அதன் பிறகு ஒரு முறை பார்த்து சொல்கிறோம் என்று ரசிகர்கள் கூலாக சொல்லிவிட்டு போகிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here