நமக்கு ஏதாவது பாடம், விளையாட்டு இல்லை ஏதாவது நமக்கு தெரியவில்லை என்றால் யூடிப் மூலம் வீடியோ பார்த்து கற்றுக் கொள்வோம். இல்லையென்றால் சினிமா சம்பந்தமான செய்திகள், நாட்டு நடப்புகள் சம்பந்தமான வீடியோக்கள் பார்த்து தெரியாத விசயங்களை தெரிந்து கொள்வோம். ஆனால் தற்போது நிறைய யூடியூப் சேனல்கள் உருவாகி உள்ளன. இதில் ஆபாச கன்டென்ட் மட்டுமே நிறைந்துள்ளது…
கவர்ச்சி பெண் தொகுப்பாளர்:-

யார் வீட்டில் என்னென்ன நடக்கிறது எந்த நடிகை யாருடன் இருக்கிறார், எந்த நடிகருக்கு விவாகரத்து இதுதான் இன்றைய யூடிப் சேனல்களில் நிரம்பி வழிகிறது. ஆபாச உடைய அணிந்த ஒரு பெண்ணை தொகுப்பாளர் என்ற பெயரில் உட்கார வைத்து டபிள் மினீங் அதாவது ஆபாசமாக பேச வைத்து அதனை வீடியோவாக யூடியூப் சேனல்கள் வெளியிடுகிறது.
இதனால் யூட்யூப் சேனல் முழுவதும் ஆபாசமே நிரம்பிவிடுகிறது. இந்த ஆபாசம் எப்போது முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த மாதிரி :-
நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூப் சேனல்களில் வெளிப்படையாக பேசி அதன் மூலம் பார்வையாளர்களை அதிகப்படுத்தி நல்ல காசும் பார்த்து யூடிப் சேனல் முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here