சினிமாவுக்கு வாய்ப்பு தேடும் பெண்களை குறி வைத்து சில சினிமா தயாரிப்பு கம்பெனிகள் சினிமா மேனேஜர்கள் என்ற பெயரில் உலாவும் மர்ம நபர்கள் பாலியல் ரீதியாக வேட்டையாடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வாய்ப்பு வேணுமா! அப்போ வரீயா?
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வரும் நிறைய பெண் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது ஒன்றும் புதுசு இல்ல. சிறு வேடமாவது கிடைத்து விடுமா? தியேட்டரில் நம்மை நாமே பார்த்து விடமாட்டோமா? என்ற ஆசையில் நிறைய பெண்கள் உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தி, தமிழ் சினிமாவில் உள்ள ஆசாமிகள் அந்த பெண்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

அட்ஜஸ்ட்மென்ட் விவகாரம்:
அந்தப் பெண்களிடம் முதலில் நடிக்க சொல்வது பிறகு அட்ஜஸ்ட்மென்ட் என்று தனியாக அழைத்து சென்று பேசுவது என்ற இந்த விவகாரம் உள்ளது. ஆரம்பித்த சில தயாரிப்பு நிறுவனத்தின் அத்துமீறல்கள் தொடர்கிறது.
உங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர் வீட்டுக்கு செல்ல வேண்டும், அலுவலகத்தில் இரவு தங்க வேண்டும் என்ற கன்ஷன்கள் வேறு உள்ளது.
சினிமாவில் இதெல்லாம் செய்யாமல் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொல்கிறீர்கள். இப்படி சில தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் ஒரு மோசடி கும்பல் செயல்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.

அம்மாவிற்கு குறிவைக்கும் கும்பல் :
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு அம்மாவுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
காரணம்:-
மகள் அந்தரங்கம் விசயங்களுக்கு சம்மதம் சொல்லவில்லை என்றால், அம்மாவை படுக்கைக்கு அழைப்பது வழக்கமான கொண்டிருக்கிறார்கள். இதனால் வாய்ப்பு கேட்டு போகும் இடத்தில் மகளையும், உங்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சினிமாவில் உள்ள மூத்தவர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.
சினிமாவில் சிறு, சிறு கதாபாத்திரம் நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தாலும் கேமரா மேன், ஆபீஸ் பாய் உட்பட பலரும் பெண்களிடம் தகாத முறையில் நடப்பதாக நிறைய புகார்கள் உள்ளன. எனவே சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என சினிமாவில் உள்ள மூத்த நடிகைகள் சொல்கிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here