சீரியலுக்கு நோ : பிக் பாஸ் சம்பளமே போதும்… ஓடி வந்த நடிகர், இளம் நடிகை

0
189

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சீரியலை ஒதுக்கிவிட்டு, பிக் பாஸ் சம்பளமும், அதன் மூலம் கிடைக்கும் பிரபலமும் போதும் என இருவர் இந்த சீசனில் குதித்துள்ளனர். சின்னத்திரை நடிகர் சத்யா மற்றும் நடிகை தர்ஷிகா, இவர்கள் தான் சீரியல்களில் இருந்து விலகி பிக்-பாஸ் 8ல் நுழைந்துள்ளனர்.

நடிகர் சத்யா ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் அண்ணா தொடரிலும், தர்ஷிகா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பொன்னி தொடரிலும் நடித்து வந்தனர். இந்த இரு சீரியல்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்றுள்ள வெற்றிகரமான சீரியல்கள்.

நடிகர் சத்யா 

நடிகர் சத்யா, விஜய் தொலைக்காட்சியின் பனிவிழும் மலர் வனம் தொடரில் நடித்தவர். பிக்-பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் என்.எஸ்.கே. ரம்யாவின் கணவராவார். என்.எஸ்.கே. ரம்யா பின்னணிப் பாடகியாக உள்ளார். இவர் என்.எஸ். கலைவாணரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் பல சிறிய பாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர். 

நடிகை தர்ஷிகா : 

விஜய் டிவியில் நல்லா ஓடுற சீரியலில் இருந்து விலகியுள்ளார் நடிகை தர்ஷிகா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி தொடரில் நடித்துவந்தார். தற்போது பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்பதற்காக பொன்னி தொடரில் இருந்து விலகியுள்ளார். 

மீடியா மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் தொகுப்பாளராக தனது சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கினார் தர்ஷிகா. பின்னர் தொடர்களில் சிறிய வேடங்களில் நடித்துவந்தார். தற்போது தொடர்களின் 2வது கதாநாயகியாக நடித்து வருகிறார். நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டனர். முறைப்படி நடனம் பயின்றவர்.

இந்த இருவரும் பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பல நாட்கள் இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here