நடிகர் பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
தரமான படத்தில் கம் பேக் கொடுக்க வேண்டும் என பிரஷாந்த் காத்திருந்த நிலையில், இவருடைய இவருடைய மார்க்கெட் அதலபாதாளத்திற்கு போனது. பிரசாந்தை வைத்து இயக்குனர்கள் யாரும் படம் இயக்க முன் வரவில்லை.
அப்படியே வந்தாலும் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. எனவே சில படங்களை பிரஷாந்த் தன்னுடைய அப்பாவின் சொந்த புரோடக்ஷனில் நடித்தார். அப்படி வெளியான ஜானி, சாகசம் போன்ற படங்கள் அடுத்தடுத்து மண்ணை கவ்வியது.
ஒரு கட்டத்தில், தெலுங்கு திரைப்படத்தில் ராம் சரணுக்கு அண்ணனாக குணச்சித்திர வேடத்தில் பிரஷாந்த் நடித்தார்.
சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான, ‘கோட்’ படத்திலும் நடிகர் பிரஷாந்த் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
மேலும் இந்த படத்திற்காக இவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் வழங்க பட்டதாகவும் தகவல் வெளியானது.
கோட் படத்திற்கு முன்னர், நடிகர் பிரஷாந்த் தன்னுடைய தந்தை தியாகராஜன் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம், ‘அந்தகன்’. ஹிந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான ‘அந்தாதூன்’ என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் வெளியானது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரசாந்துக்கு மீண்டும் சிறந்த கம்பேக்காக அமைந்தது.
பொதுவாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் படங்கள் நான்கு வாரத்திலேயே ஓடிடி தளத்தில் வெளியாகுவது உண்டு.
ஆனால் ‘அந்தகன்’ திரைப்படம், ரிலீஸ் ஆகி மூன்று மாதத்திற்கு பின்னர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி, அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சில தோல்வி படங்களை படங்கள் மட்டுமே ஓடிடி-யில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியாவது உண்டு.
ஆனால் டாப் ஸ்டாராக திரை உலகை கலக்கிய நடிகர் பிரசாந்தின் ஹிட் திரைப்படம் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியாகி உள்ளது. ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here