Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

இசைவாணி மீது நடவடிக்கை இல்லை : நடிகை கஸ்தூரி சொன்ன நகைச்சுவை

"புகார்கள் இருந்தாலும், தமிழக அரசால் அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது,'' என நடிகை கஸ்துாரி தமிழக அரசு மீது காட்டம்.…

“புகார்கள் இருந்தாலும், தமிழக அரசால் அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது,” என நடிகை கஸ்துாரி தமிழக அரசு மீது காட்டம்.

தெலுங்கு பேசும் தமிழ் மக்கள் மீது அவதூறு பரப்பிய வழக்கில் நடிகை கஸ்தூரி அவர்கள் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமின் விடுவிக்கப்பட்டார். தற்போது காவல் நிலையம் சென்று நிபந்தனை கையெழுத்திட்டு வரும் நடிகை கஸ்தூரியிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.

அப்போது பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக ஹைதராபாதில் தான் வசித்து வருகிறேன். இரண்டு படம், இரண்டு தொலைக்காட்சி தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதால், அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தடைபட்ட படிப்பு:-

தெலுங்கர்களை விமர்சித்து பேசியதாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, என்னை கைது செய்தது. அதனால், நான் நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்புக்கு போக முடியாத நிலை ஏற்பட்டு, தடைபட்டுள்ளது.

அதோடு, என் மகனுடைய படிப்பும் தடைபட்டிருக்கிறது. எனவே, ஜாமினில் வெளி வந்து விட்டாலும், போலீஸ் ஸ்டேஷனில் தொடர்ந்து கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், அதில் தளர்வு கோரி கோர்ட்டில் முறையிட்டிருக்கிறேன்.

Advertisements

அய்யப்பனை மோசமாக விமர்சித்து பாடிய இசைவாணி விவகாரத்தில் புகார்கள் இருந்தும், அரசு தரப்பில் ஏன் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊடகத்தினரும், பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதிலிருந்து, அரசின் செயல்பாட்டை எல்லாரும் புரிந்து கொள்ளலாம். புகார்கள் இருந்தாலும், தமிழக அரசால் அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது போலும்.

பேச முடியவில்லை :-

புகார் என்றதும், நடவடிக்கை எடுப்பதில் என் மீது காட்டிய அக்கறையை, மற்றவர்கள் மீது காட்ட முடியாத சூழலில் தான் தமிழக அரசு உள்ளது. இருந்தாலும், இது குறித்தெல்லாம் விரிவாக என்னால் பேச முடியவில்லை என்றார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here