ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லரை இன்று மாலை 7 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ‘கிங்ஸ்டன்’ படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார்.

இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் பே பேச்சுலர் பட புகழ் நடிகை திவ்யபாரதி ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் – திவ்யா பாரதி நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில், கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் வரும் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கிங்ஸ்டன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here