விஜயைப் போல உதயநிதியும் சினிமாவை விட்டு விலக வேண்டும் : இயக்குனர் பேரரசு கோரிக்கை

0
49

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தவுடன் சினிமாவில் இருந்து விலகி விடுவதாக அறிவித்தார். அதே போல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சினிமாவை விட்டு முழுவதுமாக விலக வேண்டும் என இயக்குனர் பேரரசு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குனர் பேரரசு மாபெரும் இயக்குனரான ராம நாராயணன் அவர்களின் உதவியாளர் ஆவார். தனது முதல் படமே நடிகர் விஜய் அவர்களை வைத்து “திருப்பாச்சி” என்னும் படத்தை இயக்கினார். அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்களை வைத்து சிவகாசி படத்தையும், அதனைத் தொடர்ந்து “திருப்பதி” படத்தையும்_ அதனைத் தொடர்ந்து நடிக்கிறது விஜயகாந்த் அவர்களை வைத்து “தர்மபுரி” படத்தையும் என அடுத்தடுத்து வெற்றி படங்களை குவித்து வெற்றி இயக்குனராக பேரரசு, தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.

பிறகு அவர் நடிகர் பரத் அவர்களை வைத்து இயக்கிய படங்கள் சரியாக போகாத காரணத்தால் இயக்குனர் பேரரசு தனது மார்க்கெட்டை இழந்தார். சிறந்த வசனகர்த்தா, பாடலாசிரியர் இயக்குனர் என பெயரெடுத்த இயக்குனர் பேரரசு தீவிர பாஜக கட்சியின் ஆதரவாளர். தற்போது அவர் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பேரரசு, விஜயின் அரசியல் பயணத்தைப் பற்றி பேனார். மேலும் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து சில முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, விஜய்யின் அரசியலில் முன்னேற வேண்டும் என்றால் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே உள்ள கட்சிகளின் கொள்கைகளை பின்பற்றுவது புதியதாகத் தெரியாது. அதனால், விஜய் மக்களுக்கு நன்மை செய்ய புதிய தீர்வுகள் கொண்டு வர வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இப்போது உதயநிதி அரசியலுக்கு வந்துவிட்டார். தற்போது, அவர் துணை முதல்வராக பதவியை வகிக்கின்றார். ஆனால், அவர் திரைப்படத்துறையில் தொடர்ந்து செயல்படும் நிலையைப் பற்றி பேரரசு கருத்து தெரிவித்தார். உதயநிதி படங்களை வாங்கி வெளியிடுவதில் இருந்து விலக வேண்டும். விஜய் தன் நடிப்பை விலக்குவதாக அறிவித்த நிலையில், உதயநிதி அவ்வாறே படங்களை தயாரித்து வெளியிடாமல் அரசியலிலேயே முழு கவனம் செலுத்த வேண்டும் என பேரரசு கூறினார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here