தெலுங்கு படத்தில் ஸ்ரீலீலா என்னும் கவர்ச்சி நடிகை இருக்க, படத்தில் இன்னொரு கவர்ச்சிப் புயல் குத்துப்பாட்டுக்கு கவர்ச்சியாக நடனமாடி உள்ளது தற்போது தற்போது வைரலாகி வருகிறது.
சமீப காலமாக தெலுங்கு சினிமாவில், படத்தில் ஒரு பாடல் குத்து பாடல் ஆக இருக்கும். அந்த பாடலில் ஒரு பிரபல நடிகை கவர்ச்சியாக நடனமாடி இருப்பார். அந்த பாடல் மிக பெரிய அளவில் ஹிட் ஆகும். இதுதான் தெலுங்கு சினிமாவின் வெற்றி சூத்திரம்.





இதனால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஏதாவது ஒரு பிரபல கவர்ச்சி நடிகையை கூப்பிட்டு வந்து குத்துப்பாட்டுகளுக்கு படுகவர்ச்சியாக ஆட வைப்பது வழக்கமாக ஒன்றாக உள்ளது. அந்த வரிசையில் “ராபின்ஹுட்” படமும் இடம் பிடித்துள்ளது.


ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் ராபின்ஹுட். நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘ஒன் மோர் டைம்’ மற்றும் 2-வது பாடலான ‘வாட்டெவர் யூ கோ’ சமீபத்தில் வெளியாகி வைரலாகின.



இதனைத்தொடர்ந்து, இப்படத்தின் 3-வது பாடலான ‘அதிதா சர்ப்ரைஸ்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பாடலுக்கு பிரபல நடிகை கெட்டிகா ஷர்மா கவர்ச்சி நடனமாடியுள்ளார். இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here