#GoodBadUglyTeaser
நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவான “குட்-பேட் அக்லி” பட டீசர் வெளியானது.
90 வினாடிகள் உள்ள இந்த டீசர் வீடியோவில் அஜித்தின் பழைய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள், வின்டேஜ் அஜித் வந்துவிட்டார் என்று கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில்,நடிகர் அஜித் குமார் அவர்களின் நடிப்பில் உருவான படம் “குட்-பேட் அக்லி”. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களுக்கு முந்திய படமான” மார்க் ஆண்டனி ” படம் மாபெரும் வெற்றி படம் என்பதால்
இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படம், பொங்கல் திருநாளின்போது வெளியிடத் திட்டமிருந்த நிலையில், அதே சமயத்தில் விடாமுயற்சியும் வெளியானதால், குட் பேட் அக்லியின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.


“விடாமுயற்சி” படம் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு தோல்வி படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு கலமையான விமர்சனங்களும் கிடைத்துள்ளது. விடாமுயற்சி படத்தால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். அதனால் “குட்-பேட் அக்லி” படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here