பிரபல நடன இயக்குநரான தினேஷ் நடிகர் சங்கத்தில் பல்வேறு முறைகளில் ஈடுபட்டுள்ளதாக சக நடன கலைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர் பண மோசடி மற்றும் ஊதிய மோசடி புகாரிலும் சிக்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடித்த திரைப்படம் லியோ. இப்படத்தில் `நான் ரெடி தான் வரவா’ பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. இந்த பாடலிற்கு நடன இயக்குநர் தினேஷ் தான். இப்பாடலில் 1000-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஆடியிருப்பர். ஆனால் அதில் ஆடிய நடன கலைஞர்களுக்கு சரியான சம்பளம் போய் சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
ஓயாத சர்ச்சை:-
ஓராண்டுக்கு போகும் முன்பே இந்தப் பாடலுக்கு நடனமாடிய சின்ன,சின்ன நடன கலைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பலரும் அவர்களுக்கான நியாயம் கேட்டு போராடினார் ஆனால் பலனில்லை.
அந்த பாட்டில் 35 லட்சம் ரூபாய் முறைக்கேடு செய்ததாக நடன இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
நடன கலைஞர்கள் புகார்:-
மேலும் நடன இயக்குனர் தினேஷ் மீது மோசடி, சக நடன கலைஞர்களை மிரட்டுவது மற்றும் ஆள் வைத்து மிரட்டுவது, சம்பளம் தராமல் ஏமாற்றியது மூத்த நடன கலைஞர்களுடன் பஞ்சாயத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் சக நடன கலைஞர்கள் மூத்த நடன கலைஞர்களுடன் இணைந்து போராட்டத்தில் இணைந்துள்ளனர். இது, தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here