தமிழ் சினிமாவில் 1988ம் வருஷம் வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நடிகை குஷ்பு.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்தி மற்றும் நெப்போலியன் என நிறைய முன்னணி நடிகர்களுடன் நாயகியாக சேர்ந்து நடித்திருந்தார்.
தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில், விஜய்யின் வாரிசு படம் பற்றியும், தனது காட்சிகள் டெலிட் ஆனது குறித்தும் பேசியுள்ளார்.
வாரிசு படம்
வாரிசு படத்தில் விஜய்க்கும்,எனக்கும் நிறைய எமோஷ்னலான காட்சிகள், மிகவும் உணர்வுப்பூர்வமான அழகான காட்சிகள் இருந்தது. படத்தில் எனக்கும் விஜய்க்கும் மட்டுமே காட்சிகள் இருந்தது, வேறு எந்த நடிகருடன் ஸீன்கள் இல்லை.
ஆனால் படத்தின் நீளம் அதிகம் உள்ளதாக சொல்லி எனது காட்சிகளை டெலிட் செய்வதாக இயக்குனர் என்னை நேரில் சந்தித்து சொன்னார். வாரிசு படத்தில் வசனங்களை விட விஜய்க்கும், எனக்கும் நிறைய சைலண்ட் ஷாட் தான் இருந்தது, குறிப்பாக நிறைய எமோஷ்னல் காட்சிகள் தான் இருந்தது.
படத்தின் படப்பிடிப்பின் அந்த காட்சிகளின் போதே நானும் விஜய்யும் நிஜத்திலேயே அழுதுவிட்டோம்.

நானும், விஜய்யும் படம் வெளியான ஆன பிறகு சந்தித்தோம், விஜய் அப்போது உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு அழகான சீன்கள் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த சீன்கள் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது என்று அவர் சொன்னதாக குஷ்பு தெரிவித்தார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here