கொலை வழக்கில் அதிரடியாக கைது பிரபல கன்னட நடிகர்… அதிர்ச்சியில் திரையுலகம்

0
88

பிரபல நடிகர்

பிரபலங்கள் பற்றி நல்ல செய்தி வந்தாலே ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

ஆனால் அவர்களை குறித்து ஏதாவது தவறான தகவல் வந்தாலே போதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள். அப்படி தற்போது ஒரு நடிகர் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் தர்ஷன் ஒரு கொலை வழக்கில் கைதாகி உள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

முழு விவரம்

பெங்களூருவில் 2 நாட்களுக்கு முன் மருந்தகத்தில் வேலை செய்து வந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

அவரது கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கெனவே 2 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் தர்ஷனின் நெருங்கிய தோழிக்கு ரேணுகா சுவாமி அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்பி வந்தது தெரிய வந்துள்ளது, இதன் காரணமாக தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளாராம்.

நடிகர் தர்ஷன் காட்டேரா, குருஷேத்ரா, கிராந்தி ஆகிய படங்கள் மூலம் கன்னட சினிமாவில் பிரபலமாகி உள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here