மகாராஜா படத்தை பார்த்த நடிகர் சிலம்பரசன் அவர்கள் படத்தின் இயக்குநர் நித்திலன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடியது. ரசிகர்களின் பாராட்டையும் பெற்றது.
ஓ.டி.டி-யிலும் சாதனை
ஓ.டி.டியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிய இந்தியப் படங்களில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட திரைப்படங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இப்போது வரை கோலிவுட், பாலிவுட் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் இந்தப் படத்தை பாராட்டி பலர் பேசி வருகிறார்கள்.
சிம்புவின் ‘மகாராஜா’ பாராட்டு!
அந்த வகையில் ‘மகாராஜா’ படத்தை சிம்பு பார்த்துவிட்டு இயக்குநர் நித்திலனை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

இயக்குநரின் டிவீட் :
இது தொடர்பாக நித்திலன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ” உங்களுடனான இந்த அருமையான சந்திப்புக்கு நன்றி சிம்பு சார். மகாராஜா திரைப்படத்தை பற்றியும் சினிமாவை பற்றியும் ஆழமாக கலந்துரையாடினோம். நீங்கள் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசும் ஒருவர். அதுமட்டுமல்ல மிகவும் எளிமையானவர். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி!” என பதிவிட்டிருக்கிறார்.
இருவரும் சந்திப்பு அடுத்து சினிமாவில் கூட்டணியாக மாறுமா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு இரு தரப்பில் இருந்தும் இதுவரை பதில் கூறவில்லை.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here