நடிகை விஜயலட்சுமியை தூண்டி விட்டது யார்? இந்த கட்சிதான் காரணமா?

0
99

6 மாதத்திற்கு ஒருமுறை, வருடத்திற்கு இரண்டு முறை என நடிகை விஜயலட்சுமி அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சீண்டி விட்டு செல்வார். இந்த முறையும் அப்படிதான். ஆனால் இந்த முறை வீடியோ காட்சி மூலமாக சீமான் அவர்களுக்கு நடிகை விஜயலட்சுமி வாய்சவாடால் விடுத்துள்ளார்.

“பிரண்ட்ஸ்” படத்தில் நடிகர் விஜய் அவர்களுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். நடிகை விஜயலட்சுமி பின்னர் ஓய்வெடுத்தார். ஆனால் “வாழ்த்துகள்” என்ற படத்தில் நடித்து அப்படத்தின் இயக்குநரான சீமான் அவர்களுடன் காதலித்து கணவன் -மனைவி போல் வாழ்ந்து, பிறகு பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது. தற்போது சீமானும் – விஜயலட்சுமியும் பிரிந்து வாழ்கிறார்கள். சீமான் அவர்களுக்கு வேறு ஒரு பெண்ணிடம் திருமணம் ஆகிவிட்டது.

தற்போது பிரச்சனை என்னவென்றால் சீமான் அவர்கள் அரசியல் மேடையில் பொதுவெளியில் வைத்து நடிகர் விஜய் அவர்களின் அரசியல் மாநாட்டையும்; அரசியல் பேச்சையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அதற்கு பதிலடி தரும் விதமாக நடிகை விஜயலட்சுமி அவர்கள் வீடியோ காட்சி மூலம் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். தற்போது அரசியல் களத்தில் இது பரபரப்பாக பேசப்படுகிறது. சமூக படைத்தலைகளில் நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோ வைரலாகி வேகமாக பரவி வருகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here