சென்னை: பிரசாந்த் பல ஆண்டுகளுக்கு பிறகு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் அந்தகன். ஹிந்தியில் வெளியான மெகா ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருக்கிறது. இப்படத்தை பிரசாந்த்தின் தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலநடிகர்கள் நடித்திருக்கும் இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று ரிலீசான நிலையில் புதிய பஞ்சாயத்து ஒன்று தொடங்கியிருக்கிறது.
இப்போது ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு அடுத்த இடங்களில் விஜய், அஜித் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விஜய் அல்லது அஜித் இவர்களின் ஒருவர் இடத்தில் இருந்திருக்க வேண்டியவர் யார் என்றால் அவர் பிரசாந்த்தான். தியாகராஜனின் மகனான அவர் 90களில் மிக பிரபலமான கதாநாயகனாக வலம் வந்தார். நடிக்க வந்த சில காலத்திலேயே பாலுமகேந்திரா, மணிரத்தினம் போன்ற லெஜெண்ட் டைரக்டர்கள் இயக்கிய படத்தில் நடித்து பலரது கவனத்தையும் கவர்ந்தார்.

சாக்லேட் பாய்: பிரசாந்த்தை பொறுத்தவரை எந்தக் கேரக்டர் என்றாலும் அசால்ட்டாக பண்ணக்கூடியவர். அவருக்கென்று 90களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த ரசிகர் பட்டாளத்தை தக்க வைக்கும் விதமாகத்தான் அவரது படங்களும் இருந்தன. வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்து அதகளப்படுத்தினார். முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் பிரசாந்த்துக்கென்று பெண் ரசிகைகள் இருந்தார்கள். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கினார் பிரஷாந்த்.
பிரச்னைகளால் வந்த விலகல்: சூழல் இப்படி இருக்க அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகள் உண்டானது. அதன் விளைவாக சினிமாவிலிருந்து அவரது கவனம் விலகியதை அடுத்து; அவரை சினிமா சற்று விலக்கி வைத்தது. சூழல் இப்படி இருக்க பல ஆண்டுகள் கழித்து ரீ என் ட்ரி கொடுத்திருக்கிறார் டாப் ஸ்டார் பிரஷாந்த். அந்த வகையில் அந்தாதூன் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் அந்தகன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். படம் எடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பிறகு ஒரு வழியாக ஆகஸ்ட் 15அம் தேதி இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தை தியாகராஜன் இயக்கியிருக்கிறார்.

முதல் சிங்கிள் ரிலீஸ்: படத்தின் முதல் சிங்கிள் நேற்று ரிலீசானது. அதனை தளபதி விஜய் வெளியிட்டார். அப்போது பிரசாந்த், பிரபுதேவா மற்றும் தியாகராஜன் இவர்களும் உடனிருந்தனர். இந்த திரைப்படத்தின் சிங்கிள் ரிலீஸுக்கு பிறகு பத்திரிகையாளர்களிடமும் பல விஷயங்களை பிரசாந்த் பகிர்ந்துகொண்டார். முக்கியமாக சினிமாவில் ஃபார்ம் அவுட் ஆனதற்கு தன்னுடைய அப்பா காரணம் இல்லை என்பதை ரத்தின சுருக்கமாக கூறி முடித்தார். நேற்று வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் காணொளியில் பிரசாந்த்தின் டான்சும் அட்டகாசமாகவே இருந்தது. எனவே பிரசாந்த்தின் எனர்ஜி லெவல் குறையவே இல்லை என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
பஞ்சாயத்து: இந்நிலையில் அந்தகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகி ஒரே தினத்தில் பஞ்சாயத்து ஒன்று முளைத்துள்ளது. அதாவது இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். நேற்று ரிலீசான ஃபர்ஸ்ட் சிங்கிளில் பாடல் வரிகளை உமாதேவியும், ஏகாதேசியும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள்; பாடல் MIxed And Mastered at AM ஸ்டூடியோஸின் சிவகுமார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்த சந்தோஷ் நாராயணன் தனது X தள பக்கத்தில், இந்தப் பாடலுக்கு இசை, வரிகள், மிக்ஸ் மற்றும் மாஸ்டர் என எல்லாம் பண்ணியது நான். ஆனால் நான் அதை பண்ணினேன் என்பதை பரிசோதிக்க எந்தக் கட்டணமும் வசூல் செய்யப்போவதில்லை” என்று கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அய்யயோ டாப் ஸ்டார் பிரஷாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு இப்போதே பஞ்சாயத்தா என்று கேள்வி கிளப்பி வருகிறார்கள்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here