சிரஞ்சீவியை மாறி மாறி சந்திக்கும் அஜித் குடும்பம்! என்னவா இருக்கும்? வைரலாகும் போட்டோ!

0
85

தமிழ் சினிமாவில் அஜித் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருகிறார். இவருக்கு கோலிவுட்டில் என ஒரு நல்ல ஓப்பனிங் இருந்து வருகிறது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளி வந்த துணிவு படம் நல்ல ஒரு சூப்பர் ஹிட் பெற்ற படமாக அமைந்தது. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் எந்த ஒரு படங்களும் வெளிவரவில்லை. அதனால் அஜித்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

அஜித் தற்போது குட் பேட் அக்லி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருகிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. முதல் கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் பக்கத்தில் தான் சிரஞ்சீவி சம்பந்தப்பட்ட ஒரு படத்தின் ஷூட்டிங்கும் நடந்து கொண்டிருந்ததாம். இதை அறிந்த அஜித் சிரஞ்சீவியை நேரடியாக அவருடைய செட்டுக்கே சென்று பார்த்தார்.

அதுதொடர்பான புகைப்படம் வெளியானது. அப்போது சிரஞ்சீவியும் அவருடைய இணையதள பக்கத்தில் அஜித்தை சந்தித்தது, அவருடைய படத்தில் ஷாலினி நடித்தது முழுவதையும் பகிர்ந்து அவருடைய சந்தோஷத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திடீரென அஜித்தின் குடும்பம் முழுவதும் சிரஞ்சீவியை சந்தித்த புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஷாலினி, ஷாமிலி, ஷாலினியின் அண்ணன் என ஆகிய மூவரும் சிரஞ்சீவியை பார்த்து அவர்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here