இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகனான நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் ஆண்டனி, பாடலாசிரியர் வைரமுத்து நடிகர் விஜய், சூர்யா,, விஜய் சேதுபதி என பல்வேறு தமிழ் சினிமா பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்கள் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “பிரபல இயக்குநர் திரு. பாரதிராஜாவின் மகன் திரு. மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணச் செய்தி அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன் என்றும், திரு. மனோஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு நடிகராக சிறந்து விளங்கும் அதே வேளையில், இயக்குநராக தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அவர் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது.
திரு.பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகனை இழந்து வாடும் திரு. பாரதிராஜாவுக்கு மன தைரியத்தை அளிக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்கள குறிப்பிட்டுள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here