சின்னத்திரையின் சூப்பர் ஸ்டார் அது பிக்-பாஸ் நிகழ்ச்சி தான். விஜய் டி.வியின் டி.ஆர்.பி ரேட்டிங்கை தூக்கிப் பிடித்து நிற்பது பிக்-பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இடம்பெற்ற பிரபலங்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது நம்ம அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அவர்கள் எவ்வளவு வாக்குகிறார்கள்?…
கடந்த சில வாரங்களுக்கு முன் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 8 தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் தமிழ் பிக்-பாஸ் சீசன் 8 மற்றும் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் சீசன் 18 தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம் விவகாரம் :
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

விஜய் சேதுபதி :
அதன்படி, பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி ரூ. 60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.
கமல் ஹாசன் :
விஜய் சேதுபதிக்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் ஹாசன் தனது 7வது சீசனுக்காக ரூ. 130 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல் கூறப்படுகிறது.
நாகர்ஜுனா :
அதே போல் தெலுங்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாகர்ஜுனா ரூ. 30 கோடி சம்பளமாக வாங்குகிறாராம்.

சல்மான் கான் :
இருப்பதில் வில்லன் சல்மான் கான் தான். இந்தி பிக் பாஸ் சீசன் 18 தொகுத்து வழங்குவதற்காக சல்மான் கான் ஒரு மாதத்திற்கு ரூ. 60 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்கின்றனர். மொத்தமாக 3 மாதங்கள் என்றால் 180 மோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் பிரபலமான நடிகர் சல்மான் கான் இருக்கிறார்.
ஆனால் இந்த கணக்கு உண்மையா? அல்லது வெறும் வதந்திதான என்பது தெரியவில்லை. ஆனால் இதில் கூறப்பட்டுள்ளது போல கோடிக்கணக்கில் தான் விஜய் சேதுபதி சம்பளம் வாங்குகிறார்கள் என்றும் விஜய் டிவி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here