த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் “வேட்டையன்”. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வேட்டையன் படத்தை பார்ப்பதற்காக நாளை ஒரு அலுவலகம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்திருக்கிறது. அதன்படி HYSAS என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வேட்டையன் படத்துக்கான டிக்கெட்டையும் கொடுத்து விடுமுறையும் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனம் தூத்துக்குடியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கம்பெனி மட்டுமில்லாமல் வேறு சில தனியார் நிறுவனங்களும் வேட்டையன் படத்துக்காக விடுமுறையை அறிவித்திருக்கிறது. முன்னதாக கபாலி, காலா, தர்பார் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் சில படங்களுக்காகவும் சில நிறுவனங்கள் விடுமுறை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here