SJ சூர்யா நடித்த படங்களில் இதை பாத்தீங்களா?. நான்கு ஹீரோக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஜாக்கி பாண்டியன்

0
140

தற்போது தமிழ் சினிமாவில் எஸ் ஜே சூர்யா என்ற பெயர் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஒரு டைரக்டராக எஸ் ஜே சூர்யா வெற்றி பெற்றததை விட தற்போது நடிகராக புதிய உச்சத்தை அடைந்திருக்கிறார். அறிமுக படம் அஜித் குமாருடன், அடுத்த படம் விஜய்யோடு என அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இவர் ஏகண்டன் படங்கள் தான் எடுப்பார் என்ற முத்திரை இவர் மீது இருந்தது. ஆனால் அதை முற்றிலும் மொத்தமாக மாற்றி இப்போது நடிப்பு அரக்கன் என்ற பெயரை பெற்று இருக்கிறார். சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி முக்கியமான டாப் 4 ஹீரோக்களின் சினிமா வாழ்க்கையை புரட்டி எடுத்து இருக்கின்றர் S J சூர்யா. அதைப்பற்றி பார்க்கலாம்.

நான்கு ஹீரோக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ஜாக்கி பாண்டியன்

சிம்பு: சிம்புவின் சினிமா கனவை மறுபடியும் அவர் கைகளில் கொடுத்தது மாநாடு படம் தான். இந்த படத்தில் பெரிய ஹிட் ஆனதுக்கு காரணம் S.J.சூர்யா என்று சொன்னால் அது யாராலுமே மறுக்க முடியாது. மாநாடு படத்தின் பட்ஜெட் 30 கோடி. இந்த படம் ஒட்டுமொத்தமாக 100 கோடி கலெக்சன் செய்தது. அது மட்டுமில்லாமல் சிம்பு கேரியரில் முதல் முதலில் 100 கோடி கிளப்பில் சேர்ந்த படம் மாநாடு படம் தான்.

சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா இணையில் உருவான டான் படம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. சிவகார்த்திகேயன் குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகனாக இருந்தாலும் அவரை இளைஞர்கள் கொண்டாடியது டான் படத்திலிருந்து தான். ஏற்கனவே டாக்டர் படம் 100 கோடி கிளப்பில் சேர்ந்து இருந்தாலும் டான் படம் சிவகார்த்திகேயனை கலெக்சன் ஹீரோவாக மாற்றியது.

விஷால்: பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் தோல்வியினை சந்தித்து வந்தார் விஷால். அவரை வெற்றி முகத்தில் ஏற்றி கொடுத்தது ஜாக்கி பாண்டியன் தான். மார்க் ஆண்டனி திரைப்படம் S.J.சூர்யா நடிப்பிற்காக தான் வெற்றி பெற்றது என்பது நிதர்சனமான உண்மை. . அதுமட்டும் இல்லாமல் விஷாலின் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் மார்க் ஆண்டனி படம் மட்டும் தான் முதன் முதலாக 100 கோடி கிளப்பில் இணைந்தது.

தனுஷ்: நடிகர் தனுஷின் 50 வது படமான ராயன் படத்திலும் S.J.சூர்யா கைகோர்த்து இருந்தார். ஒரு நடிகராக தன்னுடைய 50வது படத்தில் ஜெயித்தது மட்டும் இல்லாமல் இயக்குனராகவும் தனுஷ் வெற்றி பெற்று விட்டார். அது மட்டுமில்லாமல் இந்த படம் வெளியான ஆன 6 தினங்களில் 100 கோடி கிளப்பில் இணைந்து இருக்கிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here