Jayam Ravi is acting in a mega budget film : ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் வெற்றி பெற்றாலும் அவர் தனியாக நடித்து சமீபத்தில் வெளியான எந்த படமும் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. இப்போது ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.
பூமி படத்தில் ஆரம்பித்து அகிலன், சைரன், இறைவன் என அடுத்தடுத்து அனைத்து படங்களும் ஜெயம் ரவிக்கு தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு தற்போது ஜாக்பாட் ஒன்று அடித்து உள்ளது.
Jayam Ravi is acting in a mega budget film

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தாலும் ஜெயம் ரவி இப்போது பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். ஐசாரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தான் இந்த படம் உருவாக உள்ளது.
இந்த படமானது ஜெயம் ரவி கேரியரில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படும். இந்த படத்தை கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க போகிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்க உள்ளார்.
அதுவும் இந்த படம் விஜய்யின் புலி பட சாயலில் ஃபாண்டசி படமாக உருவாக போகிறது. ஆகையால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களை கவரும்படியாகவே அமையும் என படக்குழு பெரிதும் நம்பி உள்ளனர்.
சிம்பு போன்ற பெரிய நடிகர்களின் படங்களை ஐசாரி கணேஷ் தொடர்ந்து தயாரித்து மிகுந்த லாபத்தை பெற்று வந்தார். ஆனால் அவருடைய தயாரிப்பில் சில படங்கள் வெளி ஆகாமல் தேங்கி இருக்கும் நிலையில் இப்போது ஜெயம் ரவியை வைத்து முதலீடு செய்ய உள்ளார்.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here