சர்ச்சைகளுக்கு இடையே ரொமான்டிக் ஃபோட்டோஸ் வெளியிட்ட சூர்யா ஜோதிகா.. வைரல் புகைப்படங்கள்

0
57

Surya – Jyothika: ஜோடிப் பொருத்தம் என்ற சொல்லை சூர்யா ஜோதிகாக்காகத்தான் கண்டுபிடிச்சி இருப்பாங்க போல. 2 பேரும் காண்பதற்கு அவ்வளவு ஒரு அழகாக இருக்கிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளின் அம்மா அப்பா என்று சொன்னால் யாருமே நம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை அதுபோல இருக்கிறார்கள்.

90ஸ் கிட்ஸ்கள் மட்டுமில்லாமல் 2k கிட்ஸ் வரை கொண்டாக்கூடிய நட்சத்திர தம்பதிகள் ஆக இவர்கள் இருவரும் இருக்கிறார்கள். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் தொடங்கிய இவர்களது பயணம் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சமூக வலைத்தளங்கள் வந்த கால கட்டத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே அதில் அப்படி ஆக்டிவாக இருந்ததில்லை. ஆனால் சமீப காலமாக ஜோதிகா சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய பிட்னஸ் காணொளிகளை அதில் பகிர்ந்து வருகிறார்.

அண்மையில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த அம்பானியின் மேரேஜிற்கு ஜோதிகா மற்றும் சூர்யா சென்றிருந்தார்கள். அப்போது வெளியான போட்டோக்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அன்றைய நாளில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் அந்த போட்டோக்களோடு சேர்த்து காக்க காக்க படத்தில் இடம் பெற்ற ஒன்றா இரண்டா ஆசைகள் பாடலையும் இணைத்து இருக்கிறார். தற்போது இந்த பதிவுக்கு லைக்குகள் கொட்டி கொண்டே இருக்கிறது. அப்படியே 20 ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த அன்புச்செல்வன் மற்றும் மாயாவை கண் முன்னே கொண்டு வந்து காண்பித்து விட்டீங்களே என்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

வைரல் புகைப்படங்கள் இதோ

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here