சூர்யா செய்ததை செய்ய தவறி கோட்டை விட்ட கார்த்தி.. உயிரைப் பறித்த அஜாக்கிரதை

0
83

சர்தார் 2 படம் பிரசாத் லேபில் ஜூலை 15ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந் படத்தை பி எஸ் மித்ரன் இயக்குகிறார், பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து கொண்டுள்ளது. இந்த படத்தின் சண்டைக் காட்சியில் எதிர்பாராத வகையில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.

கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக பணிபுறிந்து வருபவர் ஏழுமலை. புது வாசர்மேன் பேட் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இந்த படத்தில் இவரும் ஒருசண்டை காட்சி கோரியோகிராபராக பணியாற்றி வந்தார். இவருக்கு 49 வயதாகிறது .

இந்நிலையில் ஏழுமலை சண்டைக்காட்சியின் போது திடீரென 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கீழே விழுந்த ஏழுமலை அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ட்ரம்களில் பலமாக மோதியுள்ளார். மோதிய வேகத்தில் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட ஏழுமலையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் என அறிவித்தனர். மோதிய வேகத்தில் அவரின் மார்பில் பலத்த காயங்களும், இதய பகுதியில் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதுதான் மரணத்திற்கு காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்

உயிரைப் பறித்த அஜாக்கிரதை

இப்படித்தான் இந்தியன் 2 படத்தில் விபத்து நடந்து 2 உயிர்கள் பறிபோனது. இதே போல் கார்த்தி சகோதரர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் போதும் கட்டப்பட்ட ரோப் அருந்து சூர்யாவிற்கு காயம் உண்டானது.

எப்பொழுதுமே சூர்யா சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இருக்க வேண்டும் என உத்தரவு போடுவாராம். அவர் சொல்வது போல இருந்தால்தான் சண்டைக் காட்சிகளில் நடிப்பாராம். ஆனால் கார்த்தி, அண்ணன் சூர்யா செய்வதை போல செய்ய தவறியுள்ளார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here