போஸ்டரில் கூட வர மாட்டேன் என்று சொன்னாங்க! பிரேமம் குறித்து உண்மையை கூறிய மடோனா!

0
245
madonna sebastian speak about premam
madonna sebastian speak about premam

Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு சொன்னதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.

madonna sebastian speak about premam

madonna sebastian speak about premam

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை மடோனா செபாஸ்டியன். பிரேமம் படம் மலையாள படம் என்றாலும் கூட அனைத்து மொழிகளிளும் மிகுந்த அளவில் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகை மடோனா செபாஸ்டியனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.

இந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பின் மூலம் நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்தார் என்றே சொல்லலாம். கடைசியாக தமிழில் விஜய் நடிப்பில் ரிலீசான லியோ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, சில படங்களில் நடிப்பதற்கு நடிகை மடோனா செபாஸ்டியன் கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற மடோனா செபாஸ்டியன் சினிமாவுக்கு வந்து தான் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய மடோனா செபாஸ்டியன் ” எனக்கு சினிமா எத்தனையோ விஷயங்களை கற்றுக்கொடுத்து உள்ளது.

என்னுடைய முதல் படமான பிரேமம் படத்தில் நான் நடித்த போது அந்த படத்தினுடைய போஸ்டரில் கூட நான் இடம்பெற மாட்டேன் என்று பட படக்குழுவினர் தெரிவித்தார்கள். ஆனால், என்னுடைய கதாபாத்திரத்தின் மீது எனக்கு அதிகமாகவே நம்பிக்கை இருந்தது. எனவே, நான் அந்த திரைப்படத்தில் நடித்தேன். பேனரில் இடம்பெறவில்லை என்றாலும் கூட அந்த கதாபாத்திரத்திற்கு எனக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து பலருடைய மனதில் இடம் பிடித்தேன்.

அதைப்போலவே, லியோ படத்திலும் எனக்கு பெரிய அளவில் சீன்கள் கிடையாது என்றாலும் கூட பேனர்களில் நான் இடம்பெறவில்லை என்றாலும் கூட என்னுடைய கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்து இருந்ததாக நான் நினைக்கிறேன். எனக்கு அந்த படத்திலும் நடித்த பிறகு மிகுந்த வரவேற்பு மக்களிடம் இருந்து கிடைத்து உள்ளது.

இசைத்துறைக்கு சென்று எதாவது சாதிக்க வேண்டும் என்று தான் சினிமாவில் நுழைந்தேன். பிறகு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு வந்தது. அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட நான் 8 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இந்த 8 வருடங்களில் ஒரு வேலைக்காக எந்த அளவுக்கு நம்மை அர்ப்பணித்து கொள்ளவேண்டும் என்பதை பற்றி கற்றுக்கொண்டேன். இன்னுமே நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்” எனவும் நடிகை மடோனா செபாஸ்டியன் தெரிவித்திருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here