ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் இடம்பெற்ற ‘மனசிலாயோ’ பாடல் வீடியோ வெளியானது. மலேசியா வாசுதேவனின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பாட வைத்துள்ளனர்.

அசத்திய மஞ்சு வாரியர்
வேட்டையன் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அவரது இசையில் உருவான இந்தப் பாடல் தற்போது பட்டித்தொட்டிய எங்கும் ஹிட் ஆகியுள்ளது. இந்த பாடல் காட்சியில் ரஜினிகாந்த் அவர்கள் 73 வயதில் எப்படி இவ்வளவு உற்சாகமாக நடனமாடி அசத்துகிறார் என்று ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.

மஞ்சு வாரியர் என்னும் தேவதை
ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்பாடலை பலரும் மீண்டும், மீண்டும் பார்க்க காரணம் நடிகை மஞ்சு வாரியர் தான் என்று ரசிகர்கள் என்று சொல்கின்றனர். “ரெட் கலர் சேலையில் கலக்கலாக நடனமாடி அசத்தி பார்வையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ளார் மஞ்சு வாரியர். நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்காக இரண்டு, மூன்று முறை பாடல் காட்சியை பார்த்தாலும், அனிருத்துக்காக 5,6 முறை பாடலை கேட்டாலும் மஞ்சு வாரியருக்காக 100 முறை பாடலை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே இருப்போம் என தமிழ் ரசிகர்கள் உற்சாகமாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் பாடல் வெளியீடு:
படத்தின் இசை வெளியீடு இம்மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள். விழாவில் இயக்குநர்கள் லோகேஷும், நெல்சனும் பங்கேற்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here