Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

ஆர் ஜே பாலாஜி இல்லாமல் மூக்குத்தி அம்மன் 2?. நயன்தாரா செய்த வேலையா இருக்குமோ

Mookuthi Amman 2: சப்தமில்லாமல் நயன்தாராவின் நியூ அப்டேட் நேற்று வெளியாகி இருக்கிறது. அதுவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தின் 2 ம் பாகம்.…

Mookuthi Amman 2: சப்தமில்லாமல் நயன்தாராவின் நியூ அப்டேட் நேற்று வெளியாகி இருக்கிறது. அதுவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற மூக்குத்தி அம்மன் படத்தின் 2 ம் பாகம். தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பல சாமி படங்கள் வெளியாகிறது மெகா ஹிட் அடித்தன.

திரையரங்கினுள் சாமி வந்து பெண்கள் ஆடிய நிகழ்ச்சிகளும் நடந்தது. ஆனால் இதெல்லாம் கிரிஞ்சாக பார்க்கப்படும் 2k கிட்ஸ்கள் காலத்தில் அம்மன் படத்தை எடுக்கப் போகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார் ஆர் ஜே பாலாஜி.

அதுவும் நயன்தாரா அம்மனாக நடிக்கிற படமா, ஏன்னா பல கேலி பேச்சுக்கள் கூட வந்தது. அம்மன் படத்தில் எந்த ஒரு இயக்குனரும் சொல்லாத விஷயத்தை சொல்லி பெரிய வெற்றியைப் பெற்றார் பாலாஜி. நவீன காலத்து அம்மன் போன்று மூக்குத்தி அம்மன் படத்தில் மேஜிக் செய்திருந்தார் நயன்தாரா.

ஆனால் நேற்று வெளியான மூக்குத்தி அம்மன் 2 அறிவிப்பில் ஆர் ஜே பாலாஜி பெயர் கூட இல்லை. அவர் இல்லாமலேயே மூக்குத்தி அம்மன் 2 ம் பாகத்தை எடுக்க போகிறார்கள். இந்த மூக்குத்தி அம்மன் 2 ம் பாகத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisements

நயன்தாராசெய்த வேலையா இருக்குமோ

ஆர் ஜே பாலாஜியின் மீதுள்ள நட்பின் காரணமாகத்தான் நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தது. ஆனால் தற்போது பாலாஜி இல்லாமலேயே படம் தயாராகப் போகிறது. இதற்குக் காரணம் த்ரிஷா மீதுண்டான காண்டு தான். அதாவது மூக்குத்தி அம்மனை நயன்தாராவை கொண்டு இயக்கிய ஆர் ஜே பாலாஜி, மாசாணி அம்மன் என்னும் படத்தை த்ரிஷாவை நடிக்க வைத்து இயக்குகிறார்.

ஏற்கனவே தன்னுடைய இடத்தை திரிஷா தட்டி பறித்து கொண்டது நயன்தாராவுக்கு கோபம். முடிஞ்ச அளவுக்கு த்ரிஷாவுக்கு பெரிய பட வாய்ப்புகள் உண்டாகாதவாறு பார்த்துக் கொள்கிறார். அதையும் கடந்து தன்னுடைய நண்பன் ஆர் ஜே பாலாஜி இப்படி ஒரு வாய்ப்பு அளித்திருப்பது நயன்தாராவுக்கு வயித்தெரிச்சல் கொடுத்துள்ளது.

அதனால் தான் தன்னுடைய சூப்பர் ஹிட் அம்மன் படத்தின் 2 ம் பாகத்தோடு களத்தில் இறங்குகிறார். இந்தப் படத்தை இயக்குவதற்கு பெரிய இயக்குனருடன் பேச்சு வார்த்தையும் நடைபெற்று கொண்டிருகிறது. மாசாணி அம்மன் மீது கோபப்பட்டு எடுக்கவுள்ள அம்மன் 2 நயன்தாராவுக்கு கை கொடுக்குமா, இல்லை வழக்கமான 2 ம் பாகக் கதைகள் போல் வழுக்கி விழுமா என காத்திருந்து பார்க்கலாம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here