ஜி.வி. பிரகாஷ் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் என்னென்ன?…

0
196

தங்கலான் மினிக்கி மினிக்கி, ஒத்த சொல்லால… குட்டி பிசாசே!.. என ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது இளம் ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார். நடிப்பு, இசையமைப்பு என இரண்டிலும் பட்டையை கிளப்பு ரசிகர்களை கவர்ந்து வரும் இவரது இசையமைப்பில் இருக்கும் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்

மினிக்கி மினிக்கி

பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் இடம்பிடித்திருக்கும் மினிக்கி மினிக்கி பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கும் பாடலாக மாறியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு உமா தேவி பாடல் வரிகள் எழுத சிந்தூரி விஷால் பாடியுள்ளார். அற்புத ஃபோக் இசை பாடலாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

குட்டி பிசாசு : காளை(சிம்பு)

சிம்பு, வேதிகா,சந்தானம், லால் நடிப்பில் உருவான படம் காளை. தருண் கோபி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட். அதிலும் “குட்டி பிசாசு” பாடல் மெகா ஹிட் அடித்தது.

கொல்லாதே

லக்கி பாஸ்கர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக வெளியான கொல்லாதே என்ற இந்த பாடலை ஆனந்ந் அரவிந்தாக்சன், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். ரெமாண்டிக்கான வரிகளுடன் கூடிய இந்த பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.

வீர தீர சூரன் டைட்டில் தீம்

விக்ரம் நடிக்க, சேதுபதி, சித்தா படப்புகழ் அருண் குமார் இயக்கி வரும் படம் வீர தீர சூரன். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாக ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் படத்தின் டைட்டில் டீசர் தீம் மியூசிக்கும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சக்கர முத்தே

ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற படம் ரெபல். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் அமைந்திருக்கும் சக்கர முத்தே என்ற பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணன் எழுத, நவக்கரை நவீன் பிரஞ்சம், கோல்ட் தேவராஜ் ஆகியோர் பாடியுள்ளனர். என்ஜாய்மெண்ட் பாடலாக இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காதலே

துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேபரில்லா ஜோடியாக நடித்து வரும் படம் வருணன் காட் ஆஃப் வாட்டர். இதில் இடம்பிடித்திருக்கும் ரொமாண்டிக் பாடலாக காதலே என்ற பாடல் உள்ளது.

ரேஷ்மன் பாடல் வாரிகள் எழுத ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி ஆகியோர் பாடலை பாடியுள்ளனர். சிறந்த மெலடியாக ரசிகர்கள் பாடல் கவர்ந்து வருகிறது

தலைவலி

ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் டியர். விண்ணுலக கவி எழுதிய இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். துள்ளலான மெலடி பாடலாக ரசிகர்களை இந்த பாடல் கவர்ந்துள்ளது.

ஸ்லீப்பிங் ப்யூட்டி

டியர் படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு ரொமாண்டிக் பாடலாக ஸ்லீப்பிங் ப்யூட்டி உள்ளது. அறிவு பாடல் வரிகள் எழுத சந்தோஷ் ஹரிஹரன் பாடியுள்ளார். இதுவும் அற்புதமான மெலடியாக அமைந்துள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here