Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

நயன்தாரா சிறிதளவும் மாறவே இல்லை: நடிகை மாலா பார்வதி நெகிழ்ச்சி

Nayanthara never changed Mala Parvati : மலையாள தொடர்கள், படங்கள், வெப் சீரியல்களில் நடித்து வருபவர் மாலா பார்வதி. மலையாள படங்கள் தவிர்த்து தமிழ் படங்களிலும்…

Nayanthara never changed Mala Parvati : மலையாள தொடர்கள், படங்கள், வெப் சீரியல்களில் நடித்து வருபவர் மாலா பார்வதி. மலையாள படங்கள் தவிர்த்து தமிழ் படங்களிலும் நடித்துக் கொண்டுள்ளார். அன்னபூரணி படத்தில் நயன்தாரா உடன் மாலா பார்வதி நடித்திருந்தார் .

Nayanthara never changed Mala Parvati

தமிழ் திரையுலகிற்கு இது என்ன மாயம் படம் மூலம் வந்தவர் நயன்தாரா. அவரை பற்றி மாலா பார்வதி நம்மிடம் கூறியதாவது,

நான் டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி செய்து கொண்டிருந்த போது தான் டயானா மரியம் குரியன் என்கிற நயன்தாராவை முதலில் சந்தித்தேன். அந்த சேனலில் சில நேரங்களில் மேக்கப் ரூமுக்கு நான் பொறுப்பாக இருப்பேன். எனக்கு மேக்கப் போட்டுவிட மிகவும் பிடிக்கும்.

அந்த நேரத்தில் தன் பெற்றோருடன் சமயம் எனும் நிகழ்ச்சிக்காக வந்தார் டயானா. அந்த நிகழ்ச்சியில் நயன்தாராவிற்கு நான் தான் மேக்கப் போட்டுவிட்டேன். எங்கள் மகளுக்கு 2 பட வாய்ப்புகள் வந்துள்ளது. அவருடைய பெற்றோர் என்னிடம் இந்த 2 படங்களில் எந்த இயக்குநர் படத்தில் நடிக்கலாம் என கேட்டார்கள்.

Nayanthara never changed Mala Parvati

சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் கெரியரை துவங்கினால் நன்றாக அமையும் என நான் பரிந்துரை செய்தேன். என் பரிந்துரையை ஏற்று கொண்டு சத்தியன் அந்திக்காடு இயக்கிய படத்தில் நடித்தார். பல ஆண்டுகள் கழித்து அன்னபூரணி படப்பிடிப்பு பகுதியில் நயன்தாராவை பார்த்தேன்.

Advertisements

இதையும் படிங்க : நிச்சயதார்த்தத்தின் போது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது வரலட்சுமியோ, மாப்பிள்ளையோ கிடையாது, இந்த இரண்டு பேர் தான்

அவர் லேடி சூப்பர் ஸ்டார். என்னை பற்றி நினைவிருக்குமோ இல்லையோ என்று நினைத்தேன். ஆனால் என்னை பார்த்த உடனேயே வந்து மிகவும் சாதராணமாக பேசினார். இத்தனை ஆண்டுகள் சென்றும் என்னை மறக்காமல் நினைவில் வைத்திருந்து என்னுடன் பேசினார். அது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
தான் ஒரு பெரிய ஸ்டார் என்கிற பெருமையே நயன்தாராவிடம் இருக்காது. எல்லோரிடமும் சாதாரணமாக பழகுவார். நான் சைவ உணவு தான் சாப்பிடுவேன் என்பது தெரிந்து எனக்காக சைவ சாப்பாடு வரவழைத்துக் கொடுத்தார்.

நயன்தாரா சினிமா துறையில் எந்த பின்புலம் இல்லாமல் யார் துணையும் இன்றி சாதித்துக் காட்டியிருக்கிறார். அவரின் வளர்ச்சியை நினைக்கும்போது பெருமையாகவும், வியப்பாகவும் இருக்கிறது என்றார்.

Nayanthara never changed Mala Parvati
Nayanthara never changed Mala Parvati

நயன்தாரா மல்லுவுட்டில் இருந்து வந்து கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையானார். அவர் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நயன்தாரா நடித்த முதல் இந்தி படமான ஜவான் ரூ. 1,100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here