ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘பவுடர்’ திரைப்படம்

0
687
powder movie tamil
powder movie tamil

powder movie tamil : இணையவாசிகளின் பெரும் பாராட்டு மழையை தொடர்ந்து திரையரங்குகளில் ‘பவுடர்’ படத்தை மீண்டும் வெளியிட படக்குழு திட்டம்

நடிகர் சாருஹாசன் நடிப்பில் ‘தாதா 87’ திரைப்படத்தை இயக்கியவரும், அமலா பால் சகோதரர் அபிஜித் பால் நடிக்கும் திரைப்படம் மற்றும் வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் ‘ஹரா’ திரைப்[படம் ஆகியவற்றை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிப்பில் உருவான ‘பவுடர்’ படம் திரையரங்குகளில் ரிலீசாகி பல்வேறு தரப்புகளிடமிருந்து பாராட்டு மழையை பெற்றது.

powder movie tamil
powder movie tamil

ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் ‘பவுடர்’ திரைப்படம் ரிலீசாகி இணையவாசிகள், ரசிகர்கள் மற்றும் இன்றைய தலைமுறையினர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்த ‘பவுடர்’ திரைப்படத்தை மறுபடியும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘பவுடர்’ படத்தில் மனைவியிடம் திட்டு வாங்கக்கூடிய கணவனாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி நடித்த்திருக்கும் காட்சிகள், குறிப்பாக பணம் கிடைத்ததும் அதிகாலையில் மனைவியை ஷாப்பிங்கிற்கு செல்ல அழைக்கும் காட்சி, ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டினை பெற்றுள்ளது. வையாபுரியும், அனித்ரா நாயரும் தந்தை-மகளாக தோன்றும் சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளன. ‘பவுடர்’ திரைப்படத்திற்கு பிறகு லியோ போன்ற பல படங்களில் நடிப்பதற்கு வையாபுரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஒரு காவல் துறை அதிகாரியாக மிகவும் தேர்ந்த நடிப்பை ‘பவுடர்’ திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். சினிமா நிகழ்ச்சிகளில் பல வண்ண உடைகளில் அவரை பார்த்தவர்கள் அனைவரும் நிகில் முருகனை காக்கி சீருடையில் ‘பவுடர்’ படத்தில் நடித்து கலக்குவதை வெகுவாக பாராட்டி ரசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : உங்க Wife ஐ காட்டிலும் நான் அழகா?.. பார்த்திபனிடம் இது போல கேட்டாரா பிரபல நடிகை?.. பற்றவைத்த பயில்வான்

சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா மற்றும் விக்கி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பவுடர்’ படத்தை விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ளார். இந்த படத்தை ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

‘பவுடர்’ குழு | powder movie tamil

கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் மற்றும் இயக்கம்விஜய் ஸ்ரீ ஜி
இசைலியாண்டர் லீ மார்ட்
ஒளிப்பதிவுராஜபாண்டி
மக்கள் தொடர்புநிகில் முருகன்
படத்தொகுப்பு குணா
கலை இயக்குநர்சரவணா
சண்டைக்காட்சிவிஜய்
உடைகள் வேலவன்
புகைப்படங்கள் ராஜா
சவுண்ட் ஸ்டுடியோ சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ
ஒலி வடிவமைப்புபிரேம்குமார்
ஒலிக்கலவை நவீன் ஷங்கர்
டிஐ வண்ணம்வீரராகவன்
வடிவமைப்பு ஜி டிசைன்ஸ்
தயாரிப்பு மேலாளர்சரவணன்
தயாரிப்பு நிறுவனம்ஜி மீடியா
தயாரிப்பாளர் ஜெய ஸ்ரீ விஜய் மற்றும் கோவை எஸ் பி மோகன் ராஜ்
ஆடியோ லேபிள்டிவோ

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here