கொந்தளித்த ரசிகர்கள்… பகிரங்கமாக மன்னிப்பு சொன்ன பிரபுதேவா

0
173

prabhudeva who apologized publicly : சென்னையில் பிரபுதேவா கலந்து கொள்ள வேண்டிய நிழக்ச்சிக்கு திடீரென கலந்துகொள்ள முடியாததால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா நடனத்திலும், நடிப்பிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் அவரின் பங்களிப்பை பெருமைபடுத்தும் நோக்கமாக சர்வதேச நடன தினத்தை உலக சாதனையாக்க திட்டமிட்டிருந்தனர்.

சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பிரபுதேவாவின் 100 பாடல்களை எடுத்து அதனை 100 நிமிடம் ஒலிக்க செய்து நடனமாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

prabhudeva who apologized publicly

இதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 5,000 ம் பேர் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரபு தேவா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் தனது குழுவினருடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் பிரபுதேவா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பங்கேற்க முடியவில்லை.

இதனால், காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை வெயிலில் காத்திருந்த சிறுவர்களும் அவர்களது பெற்றோர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

prabhudeva who apologized publicly

இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள பிரபுதேவா, “எல்லோருக்கும் என்னுடைய சல்யூட். இவ்வளவு சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கி நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி. என்னால் நிகழ்வுக்கு வர முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அங்கே நடனம் ஆடியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் அவர்களை சந்திக்க முயற்சி செய்கிறேன். இறுதிப்பாடல் முடியும் வரை லைவ்வில் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். இந்த வாய்ப்பினை தவறவிட்டுவிட்டேன். எல்லோருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நிகழ்விடத்தில் லைவ்வில் பேசிய அவர் பங்கேற்பாளர்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here