பிரியங்கா சோப்ரா
தளபதி விஜய் நடிப்பில் 2002ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் தமிழன். இப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியங்கா சோப்ரா.
இதன்பின் பாலிவுட்டிற்கு சென்ற பிரியங்கா சோப்ரா தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிக்க துவங்கினார். பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடத்தையும் பிடித்தார்.

இதை தொடர்ந்து ஹாலிவுட் சினிமாவில் களமிறங்கிய பிரியங்காவிற்கு ஆங்கில பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. Baywatch, The Sky Is Pink மற்றும் The Matrix Resurrections என பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.
சொத்து மதிப்பு
தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா சொத்து மதிப்பு பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை பிரியங்கா சோப்ரா வின் மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 620 கோடி என செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ. 14 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் பெருகிறார் எனபேசப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here