நடிகை அளித்த பாலியல் புகார் : கைதாகும் ஹர்ஷா சாய் ?..

0
150

பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால்,  ஹர்ஷா சாய் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தெலங்கானா மாநிலம், நர்சிங்கி காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், நடிகையின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்களை வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாகவும் ஹர்ஷா சாய் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த மும்பையைச் சேர்ந்த 25 வயது நடிகை ஒருவர், ஹர்ஷா சாய் மீது குற்றம்சுமத்தியிருக்கிறார். இந்த நடிகை பிக்-பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்.

புகார் அளித்த பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று நர்சிங்கி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஹர்ஷா சாய் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகை அளித்த புகார் உறுதியானால் ஹர்ஷா சாய் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here