Home Entertainment இதுதான் GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சியா! வெளிவந்த சூப்பர் செய்தி

இதுதான் GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சியா! வெளிவந்த சூப்பர் செய்தி

0
82

GOAT

தற்போது தளபதி விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்.

புதிய கீதை படத்திற்கு பின் பல வருடங்கள் கழித்து இப்படத்தில் விஜய்யுடன் யுவன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து லைலா, சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா மற்றும் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பிலுள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து விஜய் பிறந்த நாள் அன்று 2 ஆவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளைமாக்ஸ் காட்சி

இந்த நிலையில், GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தளபதி விஜய் இரட்டை பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை நாம் அறிவோம். இதில் தந்தை விஜய்க்கும் மகன் விஜய்க்கும் உண்டாகும் சண்டை தான் கிளைமாக்ஸ் சீன் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here