நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில் உருவாக்கியுள்ள தி கோட் திரைப்படம், செப்டம்பர் 5ஆம் தேதி, அடுத்த வாரம் வியாழக்கிழமை வெளியாக உஉள்ளதுள்ளது. அதற்கான தியேட்டர் முன்பதிவுகள் நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் அதிக தியேட்டர்களில் படம் வெளியாக உள்ளது.
இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் காட்சி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளன. இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் விஜயகாந்த் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இன்னும் பல சுவாரஸ்ய சர்ப்ரைஸ் காட்சிகளை இயக்குனர் வெங்கட் பிரபு படத்தில் இடம்பெற செய்துள்ளதாக கூறியுள்ளார்.
வழக்கமான திரைக்கதைக்கு மாற்றமாக, புதிய களத்தில் வெங்கட் பிரபு “தி கோட்” படத்தை உருவாக்கியுள்ளார். படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் முதல் நாள், முதல் காட்சி எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இருக்காது என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.
தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அவர்கள், தான் சினிமா துறையில் இருந்து விலகுவதாக முன்னரே அறிவித்துள்ளார். எனவே தி கோட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பலரின் எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here