இன்ப அதிர்ச்சியில் விஜயகாந்த் குடும்பம்.. விஜயகாந்த் மகனுக்கு கைகொடுக்கும் விஜய்..

0
111

விஜய் – விஜயகாந்த்

நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்தை நடிக்க வைத்து உள்ளனர். இதற்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் அனுமதியை பெற்ற பின் தான் காட்சிகளை அமைத்து உள்ளனர்.

படத்தில் 2 1/2 நிமிடம் விஜயகாந்த் AI தொழில் நுட்பம் மூலம் நடித்து உள்ளார் என்றும் அந்த காட்சியை பார்த்த பின்பு பிரேமலதா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார் என்றும் தகவல் வெளியானது. இந்த சூழலில் விஜயகாந்தின் மகனும் இளம் நடிகருமான ஷண்முக பாண்டியன் நடிகர் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

கைகொடுக்கும் விஜய்

விஜய்யிடம் தனது படைத்தலைவன் திரைப்படத்தின் டீசரை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டாராம் ஷண்முக பாண்டியன். இதற்கு விஜய் ‘இதெல்லாம் ஒரு விஷயமா, படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்க போகிறது என்று சொல்லுங்கள் நானே வருகிறேன்’ என கூறிவிட்டாராம்.

விஜயகாந்த் செய்த உதவியால் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பகால கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானார் விஜய், திரையுலகில் விஜயகாந்தின் மகனுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருக்கிறாரே என்ற அவப்பெயர் பல நாட்களாக இருந்து வந்தது. அதனை படைத் தலைவன் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொள்வதன் மூலம் நீக்க விஜய் முடிவு செய்திருக்கிறார் என இதன் மூலம் தெரிகிறது.

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here