விஜயின் 50வது பிறந்தநாள் ரீ- ரிலீசாகும் சூப்பர் ஹிட் படம்..!!

0
72

தளபதி விஜயின் 50வது பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி வருகிறது. இதைக் சிறப்பிக்கும் விதமாக விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றி கண்ட திரைப்படம் ஒன்று ஜூன் 21ம் தேதி உலகெங்கிலும் ரீ-ரிலீஸாக உள்ளது. 2007ம் வருடம் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் “போக்கிரி”.

இந்த படத்தில் தளபதி விஜய், அசின், நெப்போலியன், வடிவேலு, ஆனந்த்ராஜ், நாசர், பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். கனக ரத்னா மூவீஸ் சார்பில் எஸ். சத்திய மூர்த்தி தயாரித்த இப்படத்தை நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா இயக்கி இருந்தார்.

காதல், ஆக்க்ஷன், காமெடி மற்றும் நடனத்தில் கலக்கியிருந்த தளபதி விஜயின் திரைப் பயணத்தில் போக்கிரி திரைப்படம் ஒரு பெரிய மைல்கல் என்றே கூறலாம். எல்லா பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ள இப்படத்தின் திரைக் கதையும் மிக மிக விறு விறுப்பாக இருக்கும்.

மேலும் போக்கிரி திரைப்படம் ‘ஷிப்டிங்’ என்று சொல்லப்படும் மறு வெளியீட்டில் அப்போதே ரிலீஸாகி 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தளபதி விஜயின் ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு 50 நாட்களை நோக்கி மாபெரும் வெற்றியுடன் ஓடிக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘போக்கிரி’ திரைப்படத்தின் மறு வெளியீட்டினை தளபதி விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டமாக அவரது ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகளும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here