மம்மூட்டி
மலையாளத்தில் மூத்த முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் அன்மையில் வெளிவந்த பிரமயுகம் மற்றும் டர்போ உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்முட்டி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக பேசப்பட்டது.

சமந்தா ஜோடியா?
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக சமந்தா தான் ஹீரோயினியாக நடிக்க உள்ளார் என்றும் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னையில் இப்படத்தின் ஷூட்டிங் வருகிற ஜூன் 15ஆம் தேதி துவங்கவுள்ளதாம். மேலும் இப்படம் ஆக்க்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here