ராமராஜன் – நளினி விவாகரத்து இது தான் காரணம் .. வெளிவந்த ரகசியம்

0
135

ராமராஜன் – நளினி

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளதை நாம் எல்லோரும் அறிவோம்.

ஹீரோவாக மட்டும் நடித்து கொண்டிருந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து இல்லாமல் போனார். மேலும் தற்போது சாமானியன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படம் மக்களிடையே ஓரளவு சிறந்த வரவேற்பை பெற்று வருகிறதாக சொல்லப்படுகிறது. நடிகர் ராமராஜன் நடிகை நளினியை 1987ஆம் வருடம் திருமணம் செய்துகொண்டார். 13 வருடங்கள் திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

விவாகரத்துக்கு காரணம்

இந்த நிலையில், ஏன் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டோம் என்பதை பற்றி நடிகை நளினி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இதில் எங்களுடைய விவாகரத்துக்கு காரணம் ஜாதகம் தான் எனகூறியிருக்கிறார் நளினி.

“நான் எத்தனை ஜென்மங்கள் எடுத்து பிறந்தாலும் அவர் தான் எனக்கு கணவராக வேண்டும்.அவரும் நானும் தற்போது கூட நன்றாக பேசிக்கொண்டு தான் இருக்கின்றோம். எங்களுக்குள் நேரம் நல்லாயில்லை நாம் இருவரும் பிரிந்து இருந்தால் நல்லது. பிள்ளைகள் பிறந்து தந்தையுடன் இருந்தால் நல்லதில்லை என்ற ஜாதகம் ரீதியான காரணங்களால் தான் நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டோம். அவருக்கு ஜாதகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை” என நளினி அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here