Home Stories Photos Videos Join
TRENDS
நமது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க செய்ய வேண்டியவை என்னனு தெரியுமா?

பாண்டா கரடி மாதிரி வேஷமிட்ட நாய்..! பார்வையாளர்களை ஏமாற்றிய உயிரியல் பூங்கா!

குழந்தைகளுக்கு பிடித்தமான சுற்றுலா இடங்களில் உயிரியல் பூங்காக்கள் முக்கியமான ஒன்று. பலவிதமான காணுயிர்களையும் அங்கு பார்க்க முடியும் என்பதால் பலரும் உயிரியல் பூங்கா செல்வதற்கு விரும்புகின்றனர். ஒரு…

குழந்தைகளுக்கு பிடித்தமான சுற்றுலா இடங்களில் உயிரியல் பூங்காக்கள் முக்கியமான ஒன்று. பலவிதமான காணுயிர்களையும் அங்கு பார்க்க முடியும் என்பதால் பலரும் உயிரியல் பூங்கா செல்வதற்கு விரும்புகின்றனர். ஒரு உயிரியல் பூங்காவின் சிறப்பு வாய்ந்தது என்பது அந்த பூங்காவில் எத்தனை வகையான பறவைகள், விலங்குகள் இருக்கின்றன என்பதை பொறுத்தது.

A dog dressed as a panda bear
A dog dressed as a panda bear

சீனாவின் தைசௌ என்ற பகுதியில் உயிரியல் பூங்கா ஒன்று செயல்பட்டு கொண்டு இருக்கிறது. சீனா என்றாலே பாண்டா கரடிகள் மிகவும் பிரபலம். அதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு பாண்டா கரடிகளை பல உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்படுகின்றன. ஆனால் தௌசௌ பூங்காவில் பாண்டா கரடிகள் கிடையாது.

Advertisements

இதை சமாளிப்பதற்கு என சௌசௌ என்ற வகையை சேர்ந்த நாய்களுக்கு பாண்டா கரடி மாதிரி வண்ணம் பூசி கூண்டுக்குள் வைத்து பார்வையாளர்களை ஏமாற்றி உள்ளனர். அதை பாண்டா கரடி என்றே நம்பி தினந்தோறும் பலரும் வந்து பார்த்து சென்ற நிலையில் சமீபத்தில் குட்டு அம்பலமாகி உள்ளது. அப்படியும் அந்த பாண்டா கரடி நாயை காண்பதற்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று சமாளித்து இருக்கிறது பூங்கா நிர்வாகம்.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here

Related Latest News