அர்ஜுனின் 2 வது மருமகன் வெளிநாட்டவரா? தீயாக பரவும் செல்ஃபி போட்டோ

0
80

நடிகர் அர்ஜுனின் 2 வது மகளான அஞ்சனா வெளிநாட்டு நபருடன் எடுத்துள்ள செல்பி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று வலம் வரும் நடிகர் அர்ஜுன், அண்மையில் தனது மூத்த மகள் கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்தினார்.

தற்போது 60 வயதைக் கடந்தும் கதாநாயகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஆக்க்ஷனில் அசத்தி வருகின்றார். அண்மையில் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார் அர்ஜுன். இந்நிலையில் அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார் அர்ஜுன். மகள் ஐஸ்வர்யாவின் கல்யாணம் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாவது மகள் அஞ்சனா காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது அஞ்சனா வெளிநாட்டு நபர் ஒருவருடன் எடுத்திருக்கும் செல்ஃபி போட்டோவினை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அஞ்சனாவின் காதலரா என்று கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் இது பற்றிய எந்த ஒரு உறுதியான தகவலும் வெளிவராத காரணத்தால் குறித்த நபர் நண்பராகவும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here