தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் சினிமாவில் குதித்த அன்புமணியின் மகள் : தமிழ் மரபு சார்ந்த படமாம்?

0
95

பாமக தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா ‘அலங்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் – சவுமியா தம்பதிக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் இரண்டாவது மகளான சங்கமித்ரா தற்போது ‘அலங்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் ‘அலங்கு’ என்ற திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கியிருக்கிறார். உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார்.

அலங்கு, என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தைச் சார்ந்ததாம். ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாகவும் வரலாற்று சான்றுகளும் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

ஆனால் காலப் போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இனப் பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் நினைவூட்டலுக்கும் இந்தப் பெயர் மிகவும் பொருந்தியிருப்பதால் இத்திரைப்படத்துக்கு அலங்கு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளர் சங்கமித்ரா அவர்களும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால், அன்புமணியின் மகள் திடீரென சினிமா தயாரிப்பில் குதித்துள்ளார் என்றும் பேசப்படுகிறது. இவர்களின் குடும்பம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ திரைப்படங்களுக்கு பைனாஸ் செய்ததாக சொல்லபடுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here