தற்போது அமரன் திரைப்படம் தமிழகத்தை தாண்டி உலமெங்கும் திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் இந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப்படம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மறைந்த முன்னாள் ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் கூட பாராட்டி வருகிறார்கள்.
இந்த படத்திற்கு தமிழ்நாடு ஆந்திரா என பல்வேறு மாநிலங்களுக்கும் சிவகார்த்திகேயன் உட்பட பல குழுவினர் பட ப்ரோமோஷன் செய்தனர்.
அதில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை நெட்டிசன்கள் அந்த வீடியோவை வீடியோவாக கலாய்த்து வருகிறார்கள்.
சிவகார்த்திகேயன் கூறியதாவது, “நாங்கள் அமரன் படத்தை இராணுவ வீரர்களுக்கு போட்டுக்காட்டினோம்் அதனை பார்த்த ராணுவ வீரர்கள் சிவகார்த்திகேயன் நீங்க வேறொரு தொழிலில் இருக்கீங்க!..அதை விட்டுட்டு நீங்க இராணுவத்துக்கு வந்திருங்க என்று சொன்னாங்க”” அப்படின்னு சிவகார்த்திகேயன் அவர்கள் மேடையில் பேசியிருந்தார் தற்போது அதுதான் சர்ச்சை சர்ச்சையாக வெடித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் செமையாக உருட்டுகிறார் என்று நொட்டிஷன்கள் கலாய்த்து வருகிறார்கள்…
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here