நடிகை ஜோதிகாவின் ஏக்கம் : நடிகை என்றால் அப்படி தானா?

0
84

தமிழ் சினிமாவில் ஆண் நடிகர்களுக்கு ஒரு நீதியும்; பெண் நடிகைகளுக்கு ஒரு நீதியும் இருப்பதாக நடிகை ஜோதிகா அவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது, நடிகர்கள் வயதானாலும் அவர்களை ரசிகர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் மூத்த நடிகர்கள் தங்களுக்கு வயதானாலும் திரைப்படங்களில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்…, சின்ன…,சின்ன வயதுடைய இளம் கதாநாயகிகளுடன் ஜோடியாக நடிக்கிறார்கள். அதனை ரசிகர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால் பெண்கள் குறிப்பிட்ட வயது தாண்டிவிட்டால் அவர்களை ரசிகர்கள் கதாநாயகியாக ஏற்றுக் கொள்வதில்லை. இது தமிழ் சினிமாவில் பெரும் பிரச்னையாக உள்ளது என்று நடிகை ஜோதிகா அவர்கள் தனது ஆதங்கத்தை நெகிழ்ச்சியாக நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.

நடிகை ஜோதிகா, ஷபானா ஆஸ்மி, ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த், நிமிஷா சஜயன் மற்றும் ஷிபானி டாண்டேகர் நடித்துள்ள வெப் சீரிஸ் டப்பா கார்ட்டெல். இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாநதை ஒட்டி, அதன் புரொமஷன் நிகழ்ச்சிக்காக ஜோதிகா, ஃபீவர் எஃப்எம்மில் பேட்டி அளித்தார்.

டப்பா கார்டெல்

தற்போது அவர் நெட்ஃபிளிக்ஸ் தொடரான டப்பா கார்ட்டெலில் நடித்துள்ளார். இநத வெப் சீரிஸ் ஐந்து சாதாரண பெண்களையும் அவர்கள் வாழ்க்கை முறையை பற்றியும் பேசுகிறது. ஒரு சாதாரண மதிய உணவு அனுப்பி வரும் வேலை எப்படி அதி அபாயகரமான போதைப்பொருள் விநியோக நடவடிக்கையாக மாறியது என்பது குறித்து பேசுகிறது.

Here are some very low offer rated web hosting providers to consider: Click Here