தற்போது, நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்களின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டதாக பலர் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த கடைசி ஆசை என்னவென்றால் “நடிகர் சிலம்பரசன் அவர்களை வைத்து படம் ஒன்றையே இயக்கத் திட்டமிட்டுள்ளார். அது கடைசி வரை நிறைவேறாமல் போய்விட்டதே என்பதுதான்.
“தாஜ்மகால்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா அவர்களின் மகனான நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்களின் சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. அதனால் அவர் ஒரு சில வெற்றி படங்களை மட்டும் தன் வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இதய நோய் காரணமாக காலமானார். அவருக்கு பல்வேறு திரைப்படங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறார்கள்.

கடைசி ஆசை:-
மனோஜ் பாரதிராஜா திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று மரணம் அடைந்து இருக்கிறார். ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையையும் இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்நிலையில், மனோஜ் கடைசி ஆசை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் “சிகப்பு ரோஜாக்கள் படத்தின் அடுத்த பாகத்தை சிம்பு மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி உள்ளார். ஆனால், கடைசி வரை அந்த ஆசை நிறைவேறாமல் போய் உள்ளது”.
Here are some very low offer rated web hosting providers to consider: Click Here